Also Watch
Read this
By: Manigandan Raja

கோதையாற்றில் - திற்பரப்பு சுற்றுலா பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சவாரி மீண்டும் நேற்று துவக்கியுள்ளது. கடையால் பேரூராட்சி கட்டுப்பாட்டில் மேற்கொள்ளும் படகு சவாரிக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை கூறி நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் - படகு சவாரி ஏலம் எடுத்துள்ள நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்று பல்வேறு நிபந்தனைகளுடன் கூடி அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதை ஆற்றின் படகு சவாரி மீண்டும் இன்று முதல் துவங்கியுள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதாலும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த செய்தி குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று சுகந்திர தின விழா என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved