news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழா

காரைக்கால்

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pdy 3

காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழா முன்னிட்டு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலய 285ஆம் ஆண்டுத் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர் பவனி இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது.

இதில் மின் அலங்கார தேர் பவனியை முன்னிட்டு தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் தேர்பவனியை புதுவை, கடலூர் உயர்மறைமாவட்ட ஆயர் மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பங்கு தந்தை பால்ராஜ் குமார் துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு திருப்பலியினை நடத்தி வைத்தார்.

தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேற்றரவு அன்னையின் தேருக்கு புனித நீர் தெளித்து தேர் பவனி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. தேர் பவனி நிகழ்ச்சியில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு தூய தேற்றரவு அன்னையை வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறுவர், சிறுமியர்கள் சாகசம்...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved