Also Watch
Read this
By: Fyrose Banu

கோவையில் கொ*ல செய்யப்பட்ட கல்லூரி மாணவன் அமுதனனின் குடும்பத்தை பார்த்து நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்க வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கோவை கல்லூரி மாணவன் அமுதன் மாணவர்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். அவருக்கு முதற்கட்ட நிவாரணமாக அவரது குடும்பத்திற்கு 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது, குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது என்பதற்காக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல்..
காவல்துறையினர் இந்த வழக்கில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது, முழு விசாரணை நடந்த பின்பு விவரங்கள் தெரியவரும். தனியார் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது, போதைப் பொருள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். போதைப் பொருளை கட்டுப்படுத்த கடந்த காலங்களை விட தற்போது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்த ஆட்சியில் போதைப்பொருள் சம்பந்தமாக எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்கள் எவ்வளவு வழக்கு போடப்பட்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென சிறப்பு சிங்கப்பெண் காவல்படை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு இது இரண்டு தான் தமிழக முதல்வர் முதலில் கையில் எடுத்துள்ளார். இந்த இரண்டையும் குறைத்தால் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மாணவ, மாணவர்கள், பொதுமக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்
குற்ற சம்பவங்கள் ஒழிக்கப்பட வேண்டும், மாணவ, மாணவர்கள், பொதுமக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை அரசன் நோக்கமாக உள்ளது. அதற்குண்டான செயல்பாடுகளையும் செயல்படுத்தி வருகிறோம். மேலும் வழக்கு விசாரணை முடிந்து முழுமையான அறிக்கை வந்த பின்பு சிபிசிஐடி விசாரணை குறித்து முடிவு செய்யப்படும். போதைப்பொருள் வெளி மாநிலங்களில் இருந்து வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved