Also Watch
Read this
By: Fyrose Banu

பெருநகர சென்னை மாநகராட்சியின் 6-வது மண்டலம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் சிறுவள்ளூர் சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுவதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நிரந்தர தீர்வு காணப்பட வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர்,சிறுவள்ளூர் சாலையில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால், கழிவுநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் தேவால யம் அமைந்துள்ள நிலையில், சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அங்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே மேற் கொள்ளப்படுவதாகவும், மீண்டும் மீண்டும் கழிவுநீர் சாலையில் ஓடும் நிலை தொடர் வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved