news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

டெல்லி போராட்டம் - ராகுல் காந்தி பாராட்டு

மன உறுதி பாராட்டுக்குரியவை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல் காந்தி

இனி மாணவர்களின் குரலை அடக்க முடியாது

மோடியின் வன்முறை ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் காட்டிய துணிச்சலும், மன உறுதியும் பாராட்டுக்குரியவை என டெல்லி ,மாணவர்கள் போராட்டம் குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மாணவர்கள் அமைதி, அன்பு மற்றும் நகைச்சுவை உணர்வுடன் தங்கள் குரல்களை வெளிப்படுத்தியதாக ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக குண்டர்களின் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்கொண்ட பெண்களை நினைத்து பெருமை கொள்வதாகவும், இனி அவர்களின் குரலை அடக்க முடியாது எனவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மெட்ரோ ரயிலில் பெண் பயணியிடம் CISF வீரர் அத்துமீறல்?

தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எய்ம்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தபோது அனுமதியின்றி பெண் பயணியை CISF வீரர் புகைப்படம் எடுத்ததாகவும்.

இது குறித்து பயணி கேட்டபோது தான் எடுக்கவில்லை என CISF வீரர் கூறியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து பெண் பயணி மற்றும் சக பயணிகள் புகார் அளித்த நிலையில், CISF வீரர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

சோனியா, ராகுல், கார்கேவுக்கு பாஜகவினர் எதிர்ப்பு

வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாகக் கூறி சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜகவினர் பேரணி சென்றனர்.

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் வந்தேமாதரம் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டபோது சோனியா காந்தி ஆத்திரமடைந்தது சர்ச்சையானது. நூற்றுக் கணக்கானோர் தீப்பந்தம் ஏந்தியும், தேசியக் கொடியை பிடித்துக் கொண்டும் மூவருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Link
விநாயகர் சதுர்த்திக்கு தயராகும் மும்பை நகரம்

விநாயகர் சதுர்த்திக்கு தயராகும் மும்பை நகரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved