news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கருப்பராயன், சப்த கன்னிமார் திருக்கோவில் உற்சவ திருவிழா!

கோவை

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe 5

கோவை மாவட்டம் பேரூர், பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு கருப்பராயன், சப்த கன்னிமார் திருக் கோவில் உற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. பேரூர் பிரதான சாலை தெலுங்கு பாளையம் பிரி வருகே, அருள்மிகு கருப்ப ராயன் சப்த கன்னிமார் திருக்கோவில் உள்ளது.

அபிஷேகமும், ஆராதனை பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து, , மாலை 3 மணிக்கு, சொக்கம்புதூர் மேட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, ஆபரணப் பெட்டி தாங்கி வருதல் மற்றும் சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பால்குடம், தீர்த்தக் குடம் எடுத்து வருத லும் நடத்தப்பட்டு, குதிரை வாகனத்தில் அய்யன் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து, மாலை 5 மணிக்கு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் உச்சிகால பூஜை, படையல் பூஜை மற்றும் சிறப்பு அபி ஷேக, அலங்கார பூஜைகளும் நடத்தப்பட்டு, மதிய விருந்து நிகழ்ச்சியும், மாலை மணிக்கு மேல், முளைப்பாரி மற்றும் அய்யன் குதிரை வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், மேலும் இக்கோவிலில் உற்சவ திருவிழா, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, புண்ணியதான பூஜை, கட்டு திருநீர்ப் பிடித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு கொடியேற்ற நடந்தது. பின்னர், 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
மேலும் ,இத் திருவிழாவில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் அறங்காவ லர்கள், பேரூர் தமிழ் கல்லூரி செயலாளர் இணைச் தர்மலிங்கம், சொக்கம்புதூர் வினோத், கோவில் நிர்வாகிகள் சுப் பிரமணியன், புருஷோத்த மன், வசந்த், முத்துராஜ், ராஜசேகர், ஆனந்த், பூசாரி தினேஷ் மற்றும் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காய்கறி வியாபாரம் செய்த நடிகர் விமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved