news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இரண்டு நாட்கள் தடை

கன்னியாகுமரி

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kkn 4

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான நாட்டு படகுகள் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் நேற்றிரவு முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது ஏற்கனவே 19 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடல் பகுதிகளில் 1.9 முதல் 2.1 மீட்டர் வரை உயரம் கொண்ட 17 முதல் 19 வினாடிகள் வரை நீடிக்கும் அதிக ஆற்றல் வாய்ந்த பேரலைகள் எழும் எனவும் இது கள்ளக்கடல் நிகழ்வு எனவும் கடல் சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டுமரம் வள்ளம் மற்றும் நாட்டு படகு மீனவர்கள் 19 மற்றும் 20 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்த மீன்வளத்துறை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் படகுகள் ஒன்றோடு ஒன்று உரசாத வகையில் பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தவும் அறிவுறுத்தியது

இதனையடுத்து மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான படகுகள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடரும் கள்ளக்கடல் நிகழ்வால் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யானை முன் ரீல்ஸ் எடுத்து அட்டகாசம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved