news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ஸ்ரீ ஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா

தர்மபுரி

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dmp 01

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பி.கொல்லஅள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம் முழங்க மங்கள இசையுடன் பூர்ணாஹதி நடந்தன. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார்.

தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், ஶ்ரீபெருமாள், ஶ்ரீஅக்குமாரியம்மன், ஶ்ரீ மகாமுனியப்பன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஶ்ரீஊர்மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பூக்களால் அலங்கரித்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. ஶ்ரீஊர்மாரியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானமும்
வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்கா, போலந்து வீராங்கனைகள் அசத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved