Also Watch
Read this
By: Fyrose Banu

ஈரோட்டில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி ஐ எம் ஏ அரங்கில் நிறைவடைந்தது. இதில் மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர் மாணவ மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் உமையாள் முருகேசன் கொல்கத்தா சம்பவத்திற்கு பிறகும் மருத்துவர்கள் மீதான வன்முறைகள் தொடர்கிறது. இயற்கை மற்றும் ஒவ்வாமையால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மருத்துவர்களே காரணம் என கூறி தாக்கப்படுவதால் பெண் மருத்துவர்கள் மகப்பேறு மருத்துவப் பிரிவை தேர்வு செய்ய தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இது எதிர்காலத்தில் மருத்துவர் பற்றாக்குறையை உருவாக்கும் என்றார்.

மேலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது பிணையில் வர முடியாத கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்க்கும் ஆபத்தான முறைகளை தடுத்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved