news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்கா மோதலை விரிவுபடுத்தினால் ஈரான் புதிய திட்டம்

தாக்குதல் நடத்தும் முடிவில் ஈரான்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான் புதிய திட்டம்

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் தாக்குதல்

மோதலை அமெரிக்கா விரிவுபடுத்தினால், ஐரோப்பாவில் உள்ள அந்நாட்டின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சைப்ரசில் உள்ள பிரிட்டஷ் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தும் முடிவில் ஈரான் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எரிபொருள் நிரப்புவதற்கு பெஜ்மெர் விமானப்படை தளத்தை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி கொடுத்த பல்கேரியா மீதும் தாக்குதல் நடத்தும் முடிவிலும் உள்ளது. அதோடு, ஹோர்முஸ் நீரிணை வாயிலாக கடலுக்கு அடியில் செல்லும் பைபர் ஆப்டிக் கேபிள் மீதும் தாக்குதல் நடத்தவும் ஈரான் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெண் டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் 13 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பெண் டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 28 வயதான ஆயிஷா கிலாமானா என்கிற சம்ஸூ பீபி, தக்சிலா பகுதியில் காரில் சென்றபோது டூவீலரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஆயிஷாவின் கழுத்தில் தோட்டா பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆயிஷாவுக்கு கௌசர் மற்றும் ஜாவேத் என்ற ஷாஹீன் ஆகியோருடன் நிதி பரிவர்த்தனை இருந்ததாகவும், இந்த விவகாரத்தில் இருவரும் சேர்ந்து கொலையை ஏற்பாடு செய்திருக்கலாம் என அவரது தந்தை குற்றம்சாட்டினார்.

செங்கடலில் சவுதியின் 48 எண்ணெய் கப்பல்கள் முடக்கம்

ஹோர்முஸ் நீரிணை முற்றுகைக்கு பிறகு, சௌதி அரேபியாவின் 48 எண்ணெய் கப்பல்களை முடக்கி திருப்பி அனுப்பியதாக ஏமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது. ஈரான் மீதான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி, செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு ஹௌதி கிளர்ச்சிப்படை தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி சென்ற சௌதியின் 8 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், எண்ணெய் கட்டமைப்புகள் மீது 9 ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Link
ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை

ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலையின் மீது ஹெலிகாப்டர் மோதியதில் 7 பேர் பரிதாப பலி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved