news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கூலிங் பீருக்கு 30 ரூபாய் எக்ஸ்ட்ரா... போய் கலெக்டர்கிட்ட கேளு....

சென்னை

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
bear 4

கூலிங் பீர் என்ற பெயரில் 30 ரூபாய் கூடுதல் வசூல்,இது குறித்து கேட்ட வாடிக்கையாளரிடம் கலெக்டரிடம் போய் கேள் என ஊழியர் பதில், வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் உள்ள மதுபானக் பாரில்,கூலிங் பீர் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.30 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கூலிங் பீர் பாட்டில் வாங்கும் வாடிக்கையாளர்களிடம், பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விலைக்கு மேலாக ரூ.30 கூடுதல் தொகை வசூலிக்கப்படுள்ளது. இந்த கூடுதல் தொகை எதற்காக வசூலிக்கப்படுகிறது என வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கலெக்டரிடம் சென்று கேள் என கடை ஊழியர் பதிலளிதுள்ளார்.


இதனால் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஏற்கனவே மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், கூலிங் பீர் என்ற பெயரில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.30 வசூலிப்பது எந்த அடிப்படையில் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும்,இந்த கூடுதல் வசூல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ விலைக்கு மேலாக சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூலிங் பீர் என்ற பெயரில் கூடுதல் வசூல் நடைபெறுகிறதா,அதிகாரப்பூர்வ விலைக்கு மேல் ரூ.30 வசூலிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி
தற்போது எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டப் பகலில் மருத்துவ முகாம் எனக்கூறி ரூ.8 லட்சம் கொள்ளை..!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved