Also Watch
Read this
By: Manigandan Raja

அருண் காமராஜ் வரிகளில் "அல போலேலோ" பாடல்
நடிகர் ரஜினிகாந்தின் "ஜெயிலர் - 2" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவாகியுள்ள "அல போலேலோ" பாடலை இசையமைப்பாளர் அனிருத், தீப்திசுரேஷ், அபர்ணா ஹரிகுமார், நிரஞ்சனா ராமன் ஆகியோர் பாடியுள்ளனர்.
மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப் நடிக்கும் புதிய திரைப்படம்
மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புதிய படத்துக்கு "ஹலோ டியர்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் டினோய் பாலோஸ் இயக்க, கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். மமிதா பைஜூ தமிழக முதல்வர் விஜய்யின் “ஜன நாயகன்”, சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”, பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” போன்ற படங்களில் நாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved