Also Watch
Read this
By: Manigandan Raja

பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
உலக நாடுகள் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான முக்கிய நாடாக பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய அவர், உலகம் பல்வேறு பொருளாதார சவால்களை சந்தித்து வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக கூறினார்.
பெல்லட் குண்டுகளால் காயமடைந்ததாக இளைஞர் புகார்
டெல்லியில், போராட்டக்காரர் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது, சாஹில் லோச்சவ் என்ற இளைஞர் பெல்லட் குண்டுகளால் காயமடைந்ததாக புகார் அளித்திருந்தார்.

ஆனால், அவரது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்பட்டது. ராகுல் காந்தி, அந்த இளைஞருக்கு ஆதராவக தர்ணாவில் ஈடுப்பட்ட நிலையில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக திடீர் போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக ரிசர்வேஷன் ஹட்டாவ் என்ற பெயரில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு பதிலாக, பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved