news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டெல்லியில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்
tv

Also Watch

டெல்லியில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்

டெல்லி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பன்றிக்காய்ச்சல்

H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி

டெல்லியில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை டெல்லியில் 2,602 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், அவர்களில் 1,777 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு 

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள 6 பேரை, அவர்கள் இல்லாமலேயே விசாரிக்க மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர்களான ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 6 பேருக்கு, இன்டர்போல் மூலம் நோட்டீஸ் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

நோட்டீஸ் கிடைத்த பிறகும் அவர்கள் ஆஜராகவில்லை என்றால், அவர்கள் இல்லாமலேயே விசாரணையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் அங்கம்-அமெரிக்க தூதர்

ஜம்மு காஷ்மீர் குறித்த அமெரிக்க தூதரின் கருத்தால் பாகிஸ்தான் விரக்தி அடைந்துள்ளதாக மத்திய அரசு சாடியுள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சென்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான அங்கம் என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தூதரை அழைத்து தனது அதிருப்தியை தெரிவித்தது.

Related Link
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணமா?

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணமா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.5 கோடி காணிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved