Also Watch
Read this
By: Manigandan Raja

21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் கடிதம்
சிறையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வரும் இம்ரான் கானுக்கு மனிதாபிமான சிகிச்சை அளிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்க்சர்க்கர் உட்பட 8 நாடுகளை சேர்ந்த 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், தாங்கள் அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது எனவும், கிரிக்கெட் பயணத்தின் அடிப்படையிலேயே இந்த கடிதத்தை எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதின் மூலம், இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா 80 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து 72.22 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், வங்கதேசம் 55.56 சதவீதத்துடன் 4-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 53.33 புள்ளி சதவீதத்துடன் 5-வது இடத்தில் உள்ளது.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் செக் குடியரசு ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற போட்டியில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா - மேரி பவுஸ்கோவா ஜோடி, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா பனோவா - பெல்ஜியத்தின் மகாலி கெம்பென் ஜோடி மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய செக் குடியரசு ஜோடி 6-க்கு 1, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved