news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home
tv

Also Watch

விஜய் முதலமைச்சரானதை என்னால் நம்ப முடியவில்லை

நடிகர் அர்ஜுன் தாஸ்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகர் அர்ஜுன் தாஸ்

சினிமாவில் பெரிய நாயகன், தற்போது முதல்வர் என பெருமிதம் 

நடிகர் விஜய் முதலமைச்சர் ஆனதை தன்னால் நம்ப முடியவில்லை என நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், "மாஸ்டர்" திரைப்பட படப்பிடிப்பின் போது, விஜய்க்கு அரசியலில் ஆர்வம் உள்ளது என்பது தனக்கு உண்மையாகவே தெரியாது எனவும், ஆனால், திடீரென அவர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆனதும் தன்னால் நம்பவே முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமாவில் அவ்வளவு பெரிய நாயகனான அவர் தற்போது முதலமைச்சராக மாறியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிப்பு

நடிகர் சூர்யா நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் கடந்த 14ம் தேதி வெளியான இந்த படம், 4 நாள்களில் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், படம் வெளியான நாள் முதல் இதுவரை உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

"லீ மேன்ஸ்" பந்தயத்தில் விபத்தில் இருந்து தப்பிய நடிகர் அஜித்

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் "மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை" (((Michelin Le Mans Cup))) கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் ஓட்டிச் சென்ற சிவப்பு-வெள்ளை நிற ரேசிங் கார் வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுழன்றது.

இதையடுத்து காரில் இருந்து புகை கிளம்பியதுடன், பந்தயத் தடத்தின் ஓரத்தில் சிக்கிக் கொண்டது. பின்னால் வந்த மற்ற கார்கள் மோதாமல் விலகி சென்றதால், அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Related Link
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து கரீனா கபூர் இன்ஸ்டா பதிவு

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து கரீனா கபூர் இன்ஸ்டா பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மொத்தமாக கைவிடுகிறேன் - கொடுத்த வாக்கை காப்பாற்றினார் CM விஜய்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved