Also Watch
Read this
By: Manigandan Raja

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமாக உள்ளதாக கிளம்பிய வதந்தி
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் கரீனா கபூர் 3-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, அவரது வயிறு சற்று பருமனாக தெரிந்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதை பார்த்த நெட்டிசன்கள், கரீனா 3-வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக வதந்திகளை பரப்பத் தொடங்கினர். இந்த சூழலில், கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிரிக்கும் மற்றும் பீட்சா எமோஜிகளை பதிவிட்டு, இது வெறும் 'உணவு வயிறு' தான் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
"மொத ராத்திரி" திரைப்படம் நகைச்சுவை விருந்து
"மொத ராத்திரி" திரைப்படம் நகைச்சுவை விருந்து என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், திரையரங்குகளில் அரங்கேறும் இந்த நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், நகைச்சுவையும், உணர்ச்சிகளும் சரியான அளவில் நிறைந்து, சிறப்பாக எழுதி இயக்கப்பட்ட ஒரு குடும்ப நாடகம் எனவும், அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, கவின் இணைந்து நடித்துள்ள "ஹாய்" திரைப்படம்
நயன்தாரா, கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் 4-வது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையில் "குடிகார நெஞ்சு" என்ற பாடல் வெளியாக உள்ளது.

விஷ்ணு எடவன் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் 3 பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved