news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஆபரணத் தங்கம் விலை

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடப்பு ஆண்டின் முதல் பாதியில், தங்கத்தின் விலையில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்கள் சற்றே நிதானமாக இருந்தது. ஆனால் விலை மாறுபாடுகளின் நிலை தற்போது மீண்டும் தாறுமாறாக மாறியுள்ளது.

ரூ.6,480 விலை உயர்வு
கடந்த 15ஆம் தேதியில் இருந்து, 24ஆம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, தங்கத்தை, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு பயன்படுத்தும் நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 5% விலை உயர்ந்த தங்கத்தின் விலை, திங்கட்கிழமை அன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்ன? தங்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்குமா அல்லது இந்த ஏற்றம் விரைவில் தடைபடுமா?

கடன் பத்திர வருவாய், டாலர் மதிப்பினால்...
* சரிந்து வரும் கடன் பத்திர வருவாய் (bond yields), பலவீனமடையும் டாலர் மதிப்பு, அமெரிக்காவின் அதீத கடன் குறித்த அச்சம் மற்றும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் நடவடிக்கை தங்கத்தின் விலையை உயர்த்துகின்றன.

* முதலாவதாக, bond yields என்று சொல்லப்படும் அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் குறைந்து வருகிறது. பத்திர வருவாய் என்பதை, அமெரிக்க அரசாங்கத்திற்கு பணம் கடன் கொடுப்பதன் மூலம் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வருமானம் என்று கருதலாம். அந்த வருமானம் குறையும்போது, ​​முதலீட்டாளர்கள் மாற்று வழிகளைத் தேடத் தொடங்குகிறார்கள். அப்போது தங்கம் அதிக கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகிறது.

* இரண்டாவதாக, அமெரிக்க டாலர் மதிப்பு பலவீனமாக இருக்கும்போது, பிற நாணயங்களைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்குத் தங்கம் மலிவானதாக மாறுகிறது. இது தேவையை அதிகரிக்கிறது.

தங்கத்தின் விலையேற்றத்திற்கு...
* மூன்றாவதாக, அமெரிக்கக் கருவூலம் (US Treasury) தனது நீண்ட கால அரசுப் பத்திரங்களை, குறிப்பாக 10 முதல் 30 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் பத்திரங்களை, திரும்ப வாங்கும் நடவடிக்கைகளின் அளவை இரட்டிப்பாக்குவதாக அறிவித்தது. எளிமையாகச் சொன்னால், சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், கடன் வாங்கும் செலவைக் குறைக்கவும் உதவும் வகையில், அமெரிக்க கருவூலம் இந்தப் பத்திரங்களை அதிக அளவில் வாங்க முன்வந்துள்ளது. இது தங்கத்தின் விலையேற்றத்திற்கு மேலும் ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது. ஏன்? கருவூலம் அதிக பத்திரங்களை வாங்கும்போது, ​​அவற்றின் விலை உயரும். பொதுவாகப் பத்திரங்களின் விலை உயர்ந்தால், அவற்றின் வருவாய் (yield) குறையும். முன்பே குறிப்பிட்டது போல, குறைந்த பத்திர வருவாய் தங்கத்திற்குச் சாதகமானது.

பின்னணி என்ன?
இவற்றைத் தாண்டி தங்கம் விலை உயர்வுக்குப் பின்னால், ஒரு பெரிய பின்னணி உள்ளது. அமெரிக்க அரசின் அதீத கடன் அளவு குறித்து முதலீட்டாளர்கள் அதிக கவலை கொண்டுள்ளனர். மேலும், நிதி ஒழுங்கின் fiscal discipline மீதான நம்பிக்கை ஆட்டம் காணும்போது, ​​தங்கம் வெறும் ஆபரணமாக தெரியாமல், ஒரு காப்பீடு போலத் தெரியத் தொடங்குகிறது. இதற்கு ஒரு தொழில்நுட்பக் காரணமும் உள்ளது. ஒரு சொத்தின் மதிப்பு பொதுவாக உயர்கிறதா? அல்லது குறைகிறதா? என்பதைத் தீர்மானிக்க வர்த்தகர்கள் விலையின் போக்கில் காணப்படும் 200-day moving average என்பதைப் பார்ப்பார்கள். தங்கம் தனது 200-day moving average விலைக்கு மேல் மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை இந்த அளவைத் தாண்டியதால் வாங்கும் நடவடிக்கை அதிகரித்து உள்ளது.

உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் காரணமா?
தங்கத்திற்கு bond yields என்று சொல்லப்படும் கடன்பத்திர வருவாய் ஒரு வலிமையான எதிரியாக உள்ளது. அரசு கடன் பத்திரங்கள் (government bonds) நல்ல வருமானத்தை அளிக்கும்போது, ​​தங்கத்தை வைத்திருப்பது என்பது அந்த வருமானத்தை விட்டுக் கொடுப்பதற்குச் சமம். தங்கம் அப்படியே இருக்கும்; அது உங்களுக்கு வட்டிப் பணத்தை ஈட்டித் தருவதில்லை. எனவே, பத்திரங்களின் வருவாய் (yields) அதிகரிக்கும்போது, ​​"வேறு இடங்களில் அதிக வருமானம் ஈட்ட முடியுமே, பிறகு ஏன் தங்கத்தை வைத்திருக்க வேண்டும்?" என்று முதலீட்டாளர்கள் சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.


தங்கத்தின் இருப்பு
நீண்ட காலமாக, இந்த தொடர்பு தங்கத்தின் விலையையும் பத்திரங்களின் வருவாயையும் பொதுவாக எதிரெதிர் திசையில் வைத்துள்ளது. ஆனால் மத்திய வங்கிகள் இந்த பழைய விதியைச் சிக்கலாக்கியுள்ளன. 2026ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கிகளின் தங்க இருப்பு குறித்து உலக தங்க கவுன்சில் (World Gold Council)ஆய்வு செய்தது. அதன்படி, அடுத்த ஆண்டில் உலகளாவிய தங்க இருப்பு அதிகரிக்கும் என்று 89% மத்திய வங்கிகள் எதிர்பார்க்கின்றன; அதே சமயம் சாதனை அளவாக 45% வங்கிகள் தங்கள் சொந்த தங்க இருப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. இது தங்கம் மீதான ஒரு வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

வீழ்ச்சிக்கு வாய்ப்பில்லை
பாரம்பரிய இருப்பு சொத்துக்களை ( traditional reserve assets) மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்த்து, தங்கள் முதலீடுகளைப் பல்வகைப்படுத்த மத்திய வங்கிகள் விரும்புகின்றன. இந்தத் தேவை, விலை குறையும்போது தங்கத்தின் விலைக்கு ஒரு வலுவான அடிப்படையை (floor) உருவாக்கக்கூடும்.

அப்படியானால், இனி தங்கத்தின் நிலை என்ன? அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம், அமெரிக்க டாலர் நிலவரம் மற்றும் கடன் பத்திர வருவாய் ஆகிய மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மற்றும் புவிசார் அரசியல், கச்சா எண்ணெய் விலை, பண வீக்கம் குறித்த அச்சங்கள், வீழ்ச்சியடையும் வருவாய் போன்றவையும் தங்கத்தின் விலையை அதிகரிக்கக் கூடும். எல்லோருக்கும் புரியும் மொழியில் சுருக்கமாக சொன்னால், தங்கத்தின் விலையில் நீண்ட கால அடிப்படையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பஞ். தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி என தவெக மாவட்டச் செயலாளர் பேரம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved