news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

காவிரியில் நீர் திறக்க உத்தரவு

கர்நாடக அரசுக்கு கட்டளை

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காவிரியில், வினாடிக்கு 9000 கன அடி வீதம் நீர் திறக்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, அடுத்த 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம்...
தமிழ்நாட்டுக்கு, காவிரியில் 9,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ’கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்,’ என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. மேலும், தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு கர்நாடக நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

54ஆவது கூட்டம்...
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54ஆவது கூட்டம் இன்று, ஆகஸ்ட் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழகத்துக்கு 9,000 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. இதனடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது.

Related Link
ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய கேரள முதல்வர்

ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய கேரள முதல்வர்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஆபரணத் தங்கம் விலை

9
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved