Also Watch
Read this

கேரள முதல்வர் வி.டி.சதீசன் தனது அலுவலகப் பணியாளர்களுடன் இணைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார்.

நாளை ஓணம் பண்டிகை
கேரளத்தில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்த நிலையில், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் இணைந்து ஓணம் கொண்டாடிய முதல்வர் வி.டி.சதீசன், தொடர்ந்து, அங்குள்ள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உள்ளார். இது தொடர்பான புதிவுகளை அவர் தனது "X"தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

களை கட்டிய ஓணம்
கடந்த 9 நாட்களாக, ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கேரள மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மலையாள மக்களால் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, கேரளாவின் மிக முக்கிய அறுவடைத் திருவிழாவாகும்.

2026ஆம் ஆண்டின் ஓணம் பண்டிகை திருவோணம் நட்சத்திர நாளன்று, ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

வீடுகளில் வண்ணமயமான அத்தப்பூ கோலங்கள் இடுதல், சுவையான 'ஓணசத்யா' விருந்து சமைத்தல், புலிக்களி மற்றும் பாரம்பரிய நடனங்கள் எனப் பல நிகழ்ச்சிகள் கேரளா முழுவதும் களை கட்டியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved