news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
tv

Also Watch

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Sony Xperia 10 VIII ஸ்மார்ட்ஃபோன் தயார்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தனது ‘Simple Wave' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, வரும் செப்டம்பர் 2ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. ஒரு லட்சம் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்கூட்டரின் அவுட்டர் லுக் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

குடும்பங்களுக்கான வடிவமைப்பு
இந்த ஸ்கூட்டர், 'அரைவ்' (Arrive) என்ற குறிப்பிடப்பட்ட பெயரில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 'சிம்பிள் வேவ்' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டு உள்ளது. சிம்பிள் ஒன் போன்ற அதிவேக செயல்திறன் கொண்ட ஸ்கூட்டராக இல்லாமல், அன்றாட பயன்பாட்டிற்கும் குடும்பங்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது. தட்டையான புட்போர்டு, சவுகரியமான ஒற்றை நீள இருக்கை, டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், அலாய் வீல் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன் இதன் அவுட்டர் லுக் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 150 முதல் 180 கிமீ வரை Mileage தரும் என கூறப்படுகிறது.

பஜாஜ் நியூ அப்டேட்
2026 பல்சர் 125 பைக்கை இந்தியாவில் ரூ.92,990 ஆரம்ப விலைக்கு பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. நடுத்தர சிங்கிள் சீட் வேரியண்ட், எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.99,291க்கு அறிமுகம் ஆனது. இது வெறும் கிராபிக்ஸ் மாற்றம் மட்டுமின்றி புதிய இஞ்சின், புதிய சேசிஸ், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ள ஒரு தலைமுறை மாற்றமாகும். இதன் டாப் வேரியண்ட்டில் 5 இன்ச் TFT டிஸ்ப்ளே தரப்பட்டுள்ளது. இதில் புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் வசதியும் உள்ளது. ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட் வசதியும் இணைக்கப்பட்டு உள்ளது.

நாளை ஆக.25ல் Launch
ஸ்னாப் ட்ராகன் 6, 3rd GEN CHIPSET, 200 MP கேமரா, 6,000 mAh வரையிலான பேட்டரி திறன் கொண்ட Sony Xperia 10 VIII ஸ்மார்ட்ஃபோன் நாளை இந்திய சந்தைகளில் அறிமுகமாகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.45,000ல் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி நிறுவனம் தனது புதிய 'எக்ஸ்பீரியா’ தயாரிப்புக்கான பிரத்யேக அறிமுக விழாவை நாளை நடத்த உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. இது 'எக்ஸ்பீரியா 10 VIII' மாடலாகத்தான் இருக்கும் என உறுதியாக கூறப்படுகிறது. நாளை காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கும் சோனியின் அதிகாரப்பூர்வ நிகழ்வில் இதன் துல்லியமான விலை மற்றும் விற்பனை தேதிகள் வெளியாகும்.

Related Link
TVS Motor  electric மற்றும் ICE மாடல் ஸ்கூட்டர்களின்  தடாலடி உயர்வு

TVS Motor electric மற்றும் ICE மாடல் ஸ்கூட்டர்களின் தடாலடி உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

20 வீடுகளுக்கு ஸ்கெட்ச், ரூ.8 லட்சம் ஸ்வாஹா

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved