Also Watch
Read this
"இந்து சமய அறநிலையத்துறை இன்னும் சேகர்பாபு கட்டுப்பாட்டுலதான் இருக்கா?"ன்னு கொதிச்சுப் போயிருக்காராம் அந்த துறையோட அமைச்சர் ரமேஷ், துறையோட முக்கிய முடிவுகள் வெளியில கசியுதுன்னு முதல்வர்கிட்டேயே புகாரும் செஞ்சிருக்காராம்.

அறநிலையத் துறையோட மானியக் கோரிக்கையில பேசுன முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தவெக அரசோட 106 அறிவிப்புகளையும் சட்டமன்றத்துல அறிவிச்சதும், தன்னைப் பத்தி ஏழு துறைகள்ல நடந்த விசாரணையைப் பத்தியும் வெளிப்படையா பேசுனதும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்ஷுக்கு அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்காம்.

நம்ம அரசோட அறிவிப்புகள் எப்படி எதிர்க்கட்சிக்கு முன்கூட்டியே தெரியுது?. நாம நடத்துன விசாரணையை அவர் எப்படி பட்டியல் போட்டாரு?ன்னு தன் துறையோட மூத்த அதிகாரிகள்ட்ட ருத்ரதாண்டவமே ஆடிட்டாராம்

ரமேஷ், இந்த விவகாரத்துல கொதிச்சுப் போயிருக்கற அமைச்சர் ரமேஷ், ஒட்டு மொத்த துறை அதிகாரிகளையும் மாத்துற முடிவுக்கு வந்துட்டாராம், இதைப் பத்தி முதல்வர்கிட்ட பெரிய லெவல்ல புகாரும் செஞ்சிருக்காராம். அந்த துறையோட செயலாளர் முதல் முக்கியமான அதிகாரிகள் வரைக்குமான மாற்றல் உத்தரவு எந்த நேரத்துலயும் வரலாம்னு சொல்றாங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved