Also Watch
Read this

பொதுமக்கள் அவசியமில்லாமல் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு நெருக்கடியான சூழலுக்கு இடையிலும் இந்தியா 7 புள்ளி 8 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தியை எட்டியிருப்பதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகள் பரப்பி வந்த பொய் அம்பலமாகி இருப்பதாகவும் கூறி உள்ளார்.
அபார வளர்ச்சி
இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறி இருப்பதாவது;
2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது, இது அபார வளர்ச்சி. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. உலக விநியோக சங்கிலியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த சவால்களை தாண்டி, இந்திய மக்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த அபார வளர்ச்சிக்கு இந்திய மக்களின் கூட்டு முயற்சியும், கடின உழைப்புமே காரணம்.

தங்கத்தை வாங்க வேண்டாம்
அவசியமின்றி, தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டாம். இந்தியா அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதால், நாட்டின் டாலர் இருப்பு வெளியேறுகிறது. இதை தவிர்க்க, அவசியமில்லாத பட்சத்தில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆடம்பர திருமணம் வேண்டாம்
ஆடம்பரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் 'டெஸ்டினேஷன் வெடிங்' முறையைத் தவிர்த்து, இந்தியாவிற்குள்ளேயே திருமணங்களை நடத்த வேண்டும். வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டு சுதேசி தயாரிப்புகளையும், 'மேக் இன் இந்தியா' பொருட்களையும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். பொழுதுபோக்கிற்காக இந்திய மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதைக் குறைத்து, உள்நாட்டு சுற்றுலாக்களை ஊக்குவிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
பொருளாதார வளர்ச்சி குறைந்தால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஊதியம் குறையும். நாடு முழுவதும் வர்த்தகம் பாதிக்கப்படும். தற்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்திருப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
வளர்ச்சியடைந்த இந்தியா
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved