news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சூரி பேருக்கு பின்னணியில் இருந்த ரஜினி

தீவிர ரசிகன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Soori

என்னால் மறக்கவே முடியாது சூரி

சூரி, ரஜினியோ தீவிர ரசிகர்ங்கறது தெரிஞ்ச விஷயம்தான்னாலும், சமீபத்திய பேட்டியில தன்னோட பெயர் மாற்றம் பத்துன ஒரு எக்ஸ்க்ஸ்க்ளூசிவ் நியூஸை சொல்லியிருக்காரு.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்ங்கறதால ‘தளபதி’ படத்தைப் பார்த்துட்டு, ராமன்ங்கற என்னோட பேரை சூர்யான்னு மாத்திக்கிட்டேன், ஆனா நடிகர் சூர்யா சினிமாவுக்கு வந்ததால, அந்தப் பேரையும் மாத்தி ‘சூரி’ன்னு வெச்சுக்கிட்டேன்னு சொல்லியிருக்காரு.

சூப்பர் ஸ்டார் படம் வெளியாகுற ஒவ்வொரு முறையும் எங்களுக்கு அது ஒரு திருவிழா மாதிரிதான் இருக்குன்னும், குறிப்பா ‘தளபதி’, ‘எஜமான்’ படங்களைப் பார்த்த அனுபவத்த என்னால் மறக்கவே முடியாதுன்னு சூரி நெகிழ்ந்திருக்காரு.

லெஜண்ட் சரவணனின் அடுத்த படம்..!

லெஜண்ட் சரவணன் நடிக்கற அடுத்த படத்தை இயக்குநர் திருக்குமரன் இயக்கப் போறதா தகவல் வெளியாகியிருக்கு. ‘மான் கராத்தே’, ‘கெத்து’, ‘ரெட்ட தல’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்காரு திருக்குமரன்.

முதல்ல இந்தப் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குறதா திட்டமிடப்பட்டிருக்கு, படத்தோட பட்ஜெட் அதிகரிப்புக்கு ஆர்ட் டைரக்டர் காரணம்னு நினைச்ச துரை செந்தில்குமார் அவரை மாத்தச் சொல்லியிருக்காரு, ஆனா அந்த ஆர்ட் டைரக்டர் தன் யூனிட்டோட ஆஸ்தான டைரக்டர்ங்கறதால லெஜண்ட் சரவணன் அதுக்கு சம்மதிக்கலையாம்.

அதனால டைரக்டரையே மாத்திட்டு, அந்த இடத்துக்கு திருக்குமரன் வந்திருக்காருங்கறாங்க. இந்த புதுக் கூட்டணியோட அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவுல வெளியிடபடக்குழு திட்டமிட்டிருக்காம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை எளிதாகப் பெற நடவடிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved