news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வகுப்பெடுக்க வலியுறுத்தல்

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி, தொழில்நுட்பம் மற்றும் புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்று ஆசிரியர் தினம்
இன்று செப்டம்பர் 5ஆம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில்,

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ’மாணவர்களின் திறமைகளை வளர்த்து, நல்ல மனிதர்களாகவும், சுயசிந்தனை உடையவர்களாகவும் அவர்களை உருவாக்க ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றனர்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிவொளி பெற்ற தலைமுறை
’நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாண்டு, அறிவொளி பெற்ற தலைமுறையை உருவாக்க வேண்டும்,’ என்றும் குடியரசுத்தலைவர் முர்மு கேட்டுக் கொண்டுள்ளார்.
’ஆசிரியர்கள், தங்கள் வழிகாட்டுதல், அறிவுரைகள் மூலம், மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும். அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஓர் ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாகத் திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார்,’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 82 சிறந்த கல்வியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் 'தேசிய ஆசிரியர் விருது' வழங்கி கௌரவிக்க உள்ளார்.

Related Link
இன்றைய ராசிபலன் 05092026

இன்றைய ராசிபலன் 05092026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக் பாஸ் தமிழ் சீசன் 10, பிரம்மாண்டம்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved