Also Watch
Read this
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டின் உட்புற வடிவமைப்பு, 10 ஆண்டுகால பிக் பாஸ் பயணத்தை பிரதிபலிக்கும் வகையில், 'கர்னிவிழா' (CarniVizha) என்ற பிரம்மாண்டமான திருவிழா தீமில் உருவாக்கப்பட்டு உள்ளது.

என்னவெல்லாம்...?
* முந்தைய சீசன்களை விட இந்த முறை வீட்டின் அமைப்பிலும், விதிகளிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* இயற்கை எழில் கொஞ்சும்
பசுமை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பறவைகள், விலங்குகளின் கலைப் பொருட்கள் மற்றும் இயற்கை சார்ந்த அலங்காரங்களுடன் நேர்மறை ஆற்றலைத் தரும் வகையில் பிக்பாஸ் வீடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

* டைனிங் டேபிள் எங்கே?
இதற்கு முந்தைய சீசன்களில் சமையலறைக்கு அருகில் இருந்த டைனிங் டேபிள், இந்த முறை வீட்டின் நடுமுற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது போட்டியாளர்கள் சுதந்திரமாக நடமாடவும், அதிக விவாதங்கள் எழவும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* படுக்கையறையில்...
பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, ஆண்-பெண் என தனித்தனி படுக்கையறை இல்லாமல், போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக தங்கும் வகையில் ஒரே ஒரு பிரம்மாண்டமான படுக்கையறை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.


* சாமானிய மனிதர்களின் சுவர் சித்திரம்
இந்த சீசனில் சாமானிய மக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதைக் குறிக்கும் வகையில், வீட்டின் ஒரு பகுதியில் சிறப்பு சுவர் சித்திரம் வரையப்பட்டுள்ளது

* கேப்டனுக்கான தனி அறை
வாரம்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் பிக்பாஸ் கேப்டனுக்கு அதிகாரம் மற்றும் அந்தஸ்தை வழங்கும் விதமாக, அவருக்கென்று பிரத்யேகமான சொகுசு படுக்கையறை வடிவமைக்கப்பட்டுள்ளது

* கழிவறை மற்றும் கன்ஃபெஷன் அறை
கருப்பு-வெள்ளை நிறத்தில் பளபளப்பான நவீன தோற்றத்துடனும், கன்ஃபெஷன் அறை மிகவும் ஆச்சரியமூட்டும் மற்றும் பிரீமியம் லுக்கிலும் மாற்றப்பட்டு உள்ளன.

மேலும் புகைப்படங்கள்...







© Copyright Newstamil 24x7 2026. All rights reserved