Also Watch
Read this
By: Manigandan Raja

முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் கைது
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏர்பஸ் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் 8 லட்சம் டாலர் லஞ்சமாக பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீ
இந்தோனேசியாவின் கலிமந்தான் தீவில் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீயால், இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.

இதனால் உருவான நச்சுப் புகை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவி, காற்றின் தரத்தை கடுமையாக பாதித்துள்ளது. தீ விபத்துகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved