news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

பெண் பணியாளர்கள் பாகுபாடு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈஃபிள் கோபுரம்

பெண் பணியாளர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக புகார்

பெண் பணியாளர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், திங்களன்று ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்து மத குருமார்கள் 100 பேர் அடங்கிய குழு ஈபிள் கோபுரத்தை சுற்றிப்பார்க்க வந்த போது, பெண் பணியாளர்கள், அவர்களது பார்வையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அவர்களது இடத்தில் ஆண்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏமனில் உள்ள சிறைச்சாலை மீது சவுதி தாக்குதல்

ஏமனின் வடக்குப் பகுதியில் ஜாவ்ஃப் மாகாணத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மீது சவுதி அரேபியா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி ஆதரவு பெற்ற ஏமன் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எல்லையில் தங்கள் முதல் சாலைப் பாலத்தைத் திறந்துள்ள வட கொரியா- ரஷ்யா

உக்ரைன் போருக்கு மத்தியில் வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும் வகையில் தங்கள் முதல் சாலைப் பாலத்தைத் திறந்துள்ளது. இரு நாடுகளின் எல்லையில் உள்ள டுமென் ஆற்றின் குறுக்கே சாலைப்பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், திறப்பு விழாவை முன்னிட்டு இரு நாட்டு கொடிகளுடன் கூடிய சரக்கு லாரிகள் பாலத்தைக் கடந்து சென்றன.

ரஷ்ய அதிபர் புதின் 2024-ல் வட கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது இத்திட்டத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

Related Link
இந்தியா உடனான உறவு சிறப்புமிக்கது- ஈரான் வெளியுறவு அமைச்சகம்

இந்தியா உடனான உறவு சிறப்புமிக்கது- ஈரான் வெளியுறவு அமைச்சகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved