news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அப்பா விஜய்க்கு வரும் சத்தம், அப்படியே Recreate செய்த ஜேசன் சஞ்சய்

சேலத்தில் சிக்மா பட விழா

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலத்தில் நடைபெற்ற சிக்மா பட விழாவில் பங்கேற்ற இயக்குநரும் முதல்வர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், முதல் மேடையிலேயே கவனம் ஈர்த்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா
ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சேலத்தில் நடைபெற்றது.

தியேட்டருக்கு சென்று...
இதில் கலந்துகொண்டு பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசியதாவது;
'சிக்மா' நான் இயக்கிய முதல் படம். நம் அனைவருக்குமே வாழ்க்கையில் 'சிக்மா' என்ற ஒரு மொமன்ட் இருந்திருக்கும். அதாவது ஒரு பெரிய கஷ்டத்தில் இருந்திருப்போம். அந்த சமயத்தில் நாம் ஒரு முடிவை எடுத்து இருப்போம்.

அதனால் நம் மொத்த வாழ்க்கையும் மாறியிருக்கும். அப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு கதை தான் சிக்மா.

அனைவருக்கும் இந்தப் படத்தை கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தியேட்டருக்குச் சென்று ஆதரவு கொடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன். படம் பிடித்திருந்தால் நிச்சயம் அனைவரிடமும் சொல்லுங்கள்.

முதலில் அம்மாவிடம் சொன்ன கதை
நான் இந்தக் கதையை முதன்முதலில் என் அம்மாவிடம் தான் கூறினேன். படம் இயக்குவது என்பது எனக்குப் பொறுமையைக் கற்றுக் கொடுத்து உள்ளது. என் நண்பர்கள் மட்டும்தான் என்னிடம் உண்மையாகப் பேசுவார்கள்.
இவ்வாறு ஜேசன் சஞ்சய் பேசினார்.

டிவிகே... டிவிகே...
சிக்மா பட இயக்குனர் ஜேசன் சஞ்சய் பேச ஆரம்பித்து, "என் குடும்பத்திற்கு நன்றி," என்று கூறிய அடுத்த கணமே, அரங்கில் இருந்த மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் டிவிகே, டிவிகே என்று, விண்ணதிர முழக்கமிட்டனர்.

இதனால் சஞ்சய் தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்தி, ரசிகர்களை அமைதியாகப் பார்க்கும்படி ஒரு ரியாக்‌சன் கொடுத்தார்.

பின்னர், "சேலம் எனக்கு எப்போதும் பாசிட்டிவான நினைவுகளைத் தந்துள்ளது, நன்றி சேலம்," எனக்கூறி பேச்சை தொடர்ந்தார்.

நடிகர் விஜய், திரை உலகத்தில் இருந்து அரசியல் வருகைக்குப் பிறகு, முதல்வரான நிலையில்,

அவரது மகன் ஜேசன் சஞ்சய்யின், சினிமா இயக்குனராகி, முதல் மேடைப் பேச்சு என்பதால் இந்த பேச்சு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Link
நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா

நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved