news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

முதல்வருக்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு

"வரும் 12-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்"

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக சட்டமன்றத்தில், முதலமைச்சரின் மிசா குறித்த பேச்சை கண்டித்து, வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறி விட்டதாக விமர்சித்துள்ளது.

அமைச்சர் பதவி...
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாக கட்டமைத்து, குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, போலி வாக்குறுதி அளித்து ஆட்சியைக் கைப்பற்றி, அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையை பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால், தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று, அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி, குதிரை பேரம் நடத்தி, முதல்வர் ஆகி உள்ளார் நடிகர் விஜய்.

திமுக திட்டங்கள் நிறுத்தம்
இந்த பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால், இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி மூலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.

மக்கள் வருத்தம்
பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் மாற்றி விட்டார்.

கடும் கண்டனத்திற்குரியது
திமுகவையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும், இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா, அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின் தியாகத்தை கொச்சைப்படுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.

கண்டன ஆர்ப்பாட்டம்
சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது. ஆட்சியின் தோல்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12ஆம் தேதி, சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இவ்வாறு திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய ஹாக்கி அணிக்கு மீண்டும் நீல நிற ஜெர்சி தேர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved