Also Watch
Read this
By: Manigandan Raja

"இம்மார்ட்டல்" திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி
"இம்மார்ட்டல்" திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் ஜிவி பிரகாஷுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் யமகா ஆர்எக்ஸ் 100 வாகனத்தை பரிசளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த 4-ம் தேதி வெளியான இந்த படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையம்சம் கொண்ட இந்த படம் 8 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
"பத்தா" திரைப்படம் திரைப்படத்தின் முதல் பாடலான "மகளே" வெளியீடு
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள “பத்தா” திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் நேத்தா எழுதியுள்ள “மகளே” என்ற பாடலை, சாய் அபயங்கர் இசையமைத்து ஹரிணியுடன் இணைந்து பாடியுள்ளார்.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்துள்ளார். 1960-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்த படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved