Also Watch
Read this
By: Manigandan Raja

ட்ரோன்கள் மூலம் இரட்டை கோபுரங்களின் உருவம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 9/11 தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ட்ரோன்கள் மூலம் இரட்டை கோபுரங்களின் உருவம் வானில் ஒளிரச் செய்யப்பட்டது. உயிரிழந்த 2,977 பேரை நினைவுகூரும் வகையில் 2,977 விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இரட்டை கோபுரங்கள் முழு கட்டிட அளவிலும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவுகள்
ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது. அமீரகத்தின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் மற்றும் விரோதமான நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அல்ஜீரியா தெரிவித்துள்ளது.

மேற்கு சஹாரா விவகாரத்தில் அல்ஜீரியா மற்றும் அமீரகம் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. மேற்கு சஹாராவை சுதந்திர நாடாக அங்கீகரிக்க அல்ஜீரியா ஆதரவு தெரிவித்து வருகிறது. ஆனால், மேற்கு சஹாராவை மொராக்கோவின் ஒரு பகுதியாக அமீரக அரசு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved