Also Watch
Read this
By: Manigandan Raja

தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் ராஜினாமா
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தலைமையிலான அரசில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். தொழில், வர்த்தகம் மற்றும் விநியோகத் துறை அமைச்சர் கௌரி குமாரி யாதவ் ராஜிநாமா செய்துள்ள நிலையில், இது பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3 -வது அமைச்சர் ராஜிநாமாவாகும். இதனால் புதிய அரசுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.
பிரிட்டன் கொண்டுவரப்பட்ட பேயக்ஸ் திரைத்துணி
சுமார் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு Bayeux திரைத்துணி மீண்டும் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 1066-ஆம் ஆண்டு நார்மன் படையெடுப்பை சித்தரிக்கும் இந்த 70 மீட்டர் நீளமுள்ள இடைக்கால வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைப்படைப்பு , பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பிரிட்டன் இடையிலான முக்கியமான கலாசார பரிமாற்றமாக இது பார்க்கப்படுகிறது.
பூச்சி இனத்திற்கு பிரபல பாடகி Taylor Swift-ன் பெயர்
ஆஸ்திரேலியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள பூச்சி இனத்திற்கு பிரபல பாடகி Taylor Swift-ன் பெயரை அடிப்படையாக கொண்டு Swiftiephylus என ஆராய்ச்சியாளர்கள் சூட்டி உள்ளனர்.

Taylor Swift-ன் தீவிர ரசிகையான ஆராய்ச்சியாளர் சாரா, பூச்சிகள் உலகளவில் கவனம் பெற வேண்டும் என்பதற்காகவும், அவை அவரை போல் தோற்றமளிப்பதாலும் இவ்வாறு பெயர்சூட்டியதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved