news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

நேரலையில் சாலமன் பாப்பையா இறுதி ஊர்வலம்

அரசு மரியாதை வழங்கப்படுகிறது...

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

இதுகுறித்த தகவலை அமைச்சர் நிர்மல் குமார் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். ’தமிழறிஞர் அய்யா சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்,’ என்று அமைச்சர் நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார். முன்னதாக, மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படுமா? என்று அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இன்று நடைபெறும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இறுதி அஞ்சலி
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை​யில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், பொது​மக்​கள், திரளானோர் அஞ்சலி செலுத்தி வரு​கின்​றனர்.

முதல்வர் விஜய் இரங்கல்
அவரது மறைவையடுத்து முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைக்கலைஞர்கள், பேச்சாளர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. தத்தனேரி சுடுகாட்டில் உடல் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
மறைந்தது பட்டிமன்ற பேரொளி, சாலமன் பாப்பையா காலமானார்

மறைந்தது பட்டிமன்ற பேரொளி, சாலமன் பாப்பையா காலமானார்

     

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் மீது திமுக அரசு வழக்கு பதியாதது ஏன்? திருமாவளவன் கேள்வி

17
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved