Also Watch
Read this
By: Manigandan Raja

ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள்
நடிகர் சூரியின் ‘மண்டாடி’ திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து, கூடுதலாக 500-க்கும் அதிகமான திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், இரண்டே நாட்களில் 15 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படம் ஓடிடியிலும் சாதனை
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் வெற்றி நடை போட்டு சாதனைகளை படைத்து வருகிறது. செப்டம்பர் 4ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியான இப்படம், இந்தியாவில் அதிகம் டிரெண்டாகும் படங்களின் பட்டியலில் டாப் 2 இடங்களுக்கு முன்னேறியும், உலகளவில் டாப் 10 படங்களின் பட்டியலில் இடம்பிடித்தும் சாதனை படைத்துள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved