Also Watch
Read this
By: Manigandan Raja

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 13.4 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 82 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் எடுத்தனர்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸை 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன் மூலம், டி20 போட்டிகளில் அவர் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், டி20 போட்டிகளில் 350 விக்கெட்களை கைப்பற்றிய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
நமீபியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி
நமீபியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. விந்தோக்கில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நமீபியா அணி, தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 21.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-க்கு 0 என தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved