Also Watch
Read this
By: Manigandan Raja

தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. முதல் பாதியில் 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-வது பாதியில் மேலும் ஒரு கோல் அடித்து 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து 4-வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 6-வது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்ட இவர், 6-க்கு 3, 7-க்கு 6, 5-க்கு 7, 6-க்கு 2 என போராடி வீழ்த்தி முதன்முறையாக யுஎஸ் ஓபன் கோப்பையைக் கைப்பற்றினார்.

220 கேட்சுகள் பிடித்து ஜோ ரூட் புதிய சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார். 220 கேட்சுகளுடன் ரூட் முதலிடத்திலும், 219 கேட்சுகளுடன் ஸ்மித் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved