news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஆசிய கோப்பையை பெற மறுத்து திரும்பிய இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் மறுத்துவிட்டனர்.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தான் அமைச்சர் நக்வி, ஏசிசி தலைவராக உள்ளார்

கடந்தாண்டு ஆசியக் கோப்பை வென்ற இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற மறுத்த நிலையில், தற்போது பெண்கள் அணியும் அவரிடம் இருந்து கோப்பையை பெற மறுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வி கோப்பையை வழங்க வந்தார். ஆனால், அவரிடமிருந்து கோப்பையை பெற இந்திய மகளிர் மறுத்துவிட்டனர்.

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றியது. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.

ஸ்மிருதி மந்தனா - ஷெபாளி வர்மா முறையே 59 மற்றும் 68 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் கேப்டனுக்கு ஜெர்சி நினைவுப் பரிசு

டெல்லியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஷின் ஷத்ரானுக்கு((Ibrahim Zadran)) தனது கையொப்பமிட்ட இந்திய அணியின் ஜெர்சியை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வழங்கினார். 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடரை தொடங்கி வைக்கும் விதமாக நினைவுப் பரிசை வழங்கினார்.

Related Link
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்: இந்தியா சாம்பியன்

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்: இந்தியா சாம்பியன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved