Also Watch
Read this
By: Manigandan Raja

ஏவுகணைகள், பீரங்கிகள், ட்ரோன்கள் மூலம் கூட்டு தாக்குதல் பயிற்சி
ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கூட்டு நேரடித் தாக்குதல் பயிற்சியை மேற்கொண்டதாக அறிவித்துள்ள வட கொரியா, இந்த பயிற்சி ஒருங்கிணைந்த தாக்குதலின் அபாரமான சக்தியை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக வடகொரியா சனிக்கிழமை காலை குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தியதை கண்டறிந்ததாக, தென்கொரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹவுதிகள் தாக்குதல்; செங்கடல் பகுதியில் போர் பதற்றம்
செங்கடல் பகுதியில் ஹவுதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக சவுதி அரேபியா தனது முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் இணைப்பை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் எழுந்த தடைகளுக்கு மாற்றாக சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த 1,200 கிலோ மீட்டர் நீள எண்ணெய் குழாயின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய், சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved