news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜிம்பாப்வே

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதல் 

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் போட்டி தொடங்கியது. இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஏனெனில், 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. எனவே, இதற்கான தயாரிப்பாக இந்த போட்டிகளை ஆஸ்திரேலியாவும், ஜிம்பாப்வேயும் பயன்படுத்துகின்றன.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 2-வது டி20 போட்டி

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பின்னடைவு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது வருண் சக்ரவர்த்திக்கு புதிதாக காயம் ஏற்பட்டுள்ளது ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆகவே அவர் இந்த டி20 தொடரிலிருந்து விலகுவதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆசிய போட்டிகளில் அவர் விளையாடுவதும் சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Link
ஆசிய கோப்பையை பெற மறுத்து திரும்பிய இந்திய மகளிர் அணி

ஆசிய கோப்பையை பெற மறுத்து திரும்பிய இந்திய மகளிர் அணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை சமந்தாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved