Also Watch
Read this
’திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறோம்,’ என்ற பெயரில் விசிக மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்புகிறார்கள் என, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

ஸ்டாலின் சந்திப்பேன்...
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைவார். சென்னை திரும்பியவுடன் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பேன்.

சேகர்பாபு, ஆ.ராசா பேச்சு...
போராட்ட மேடைகளில் ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனி நபர் ரீதியாகவும், பிறப்பு குறித்தும் கொச்சையாக விமர்சித்தது அதிர்ச்சி தருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஒருபோதும் நாகரீக வரம்பை மீறியதில்லை. ஆனால், இவர்கள் பேசிய பேச்சு பொது மக்களிடையே முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.
மின்வெட்டு உண்மையே

இடைத்தேர்தல் களத்தில்...
தமிழகத்தில் மட்டுமல்ல, பல மாநிங்களில் தேர்தல் நேரங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்குவது அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளது. இந்த கலாச்சாரம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமற்றது. இந்த இடைத்தேர்தலில் அப்படி நடக்க கூடாது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி தருவதுதான் தனது கடமை என்று கருதுகிறது. ஆனால், பண விநியோகத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

சுய விமர்சனம்...
திமுக கூட்டணியில் நீண்ட காலமாக பயணித்து உள்ளோம். நாங்கள் எப்படி பணியாற்றுவோம் என ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு தெரியும். ஆனால், திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்ற பெயரில் சில பேர் எங்கள் மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்புகிறார்கள். துரோக பட்டத்தை சூட்டுகிறார்கள்.
திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக நாங்கள் வெளியேறினோம் என்பதைப் போன்ற ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குவது சரியானது அல்ல. என்னுடைய தலைமைத்துவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்கிறேன். நான்கு மாதமாக இதனை தொடர்ந்து பேசி வருகிறேன். திமுக தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருப்பதனால் அதனை நான் சுட்டிக் காட்டினேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved