news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

"அசுரன்" படத்தை மிஞ்சிய தீண்டாமை அவலம், கடலூரில் பள்ளி சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்

"செருப்பை தலையில் வை, சாணியால் அடிப்போம்"

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் அருகே பள்ளிக்கு சென்ற பட்டியலின சிறுவர்களை வழிமறித்து, "செருப்பை கழற்றி தலையில் வைத்து நடக்க வேண்டும்," என அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தக பையை சுமக்க வேண்டிய சிறுவர்கள், சாதிய ஒடுக்குமுறையால் செருப்பை தலையில் சுமக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், இந்த அநியாயத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அசுரன் படத்தை போல...
வெள்ளித்திரையில் கண்ட ’அசுரன்’ படத்தின் கொடூரத்தையும் தாண்டிய ஒரு தீண்டாமை வெறியாட்டம், இன்றைக்கு நிஜத்தில் அரங்கேறியிருப்பது தான் உச்சக்கட்ட அவலம்.

கரிக்குப்பம் கிராமத்தில்...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கரிக்குப்பம் கிராமத்தில், பட்டியலின மக்கள் இந்த ஆண்டு புதிதாக விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கினர். மேள தாளங்கள் முழங்க, ஊர்வலம் கரிக்குப்பம் அருகிலுள்ள தோப்பு இருப்பு பகுதிக்கு வந்தபோது, ’எங்கள் தெரு வழியாக நீங்கள் வரக்கூடாது, தாள வாத்தியங்களை அடிக்க கூடாது,’ என மாற்று சமுதாயத்தினர் வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவல் துறையினர் தலையிட்டு தற்காலிகமாக சமாதானம் பேசி முடித்து வைத்தனர்.

தோலை உரிப்போம்...
வழக்கம்போல் சீருடை அணிந்து பள்ளிக்குக் கிளம்பிய பட்டியலினச் சிறுவர்களை, அந்தத் தெருவில் வைத்து மாற்றுச் சமுதாயத்தினர் வழி மறித்துள்ளனர். ’எங்கள் தெருவில் நடக்கும்போது செருப்பு போட்டு நடக்க கூடாது, செருப்பை கழற்றி தலையில் வைத்துக்கொண்டு தான் நடக்க வேண்டும், மீறி நடந்தால் சாணியை அள்ளி அடித்து தோலை உரிப்போம்,’ என சாதிப் பேரைக் கூறி மிரட்டியுள்ளனர். கையில் புத்தகப் பையோடும், காலில் செருப்போடும் பள்ளிக்கு சென்று படிக்க நினைத்த சிறுவர்கள், அளித்த பேட்டி அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

அடுத்தகட்ட அதிரடி என்ன?
குழந்தைகளுக்கு நேர்ந்த இந்தத் தீண்டாமை கொடுமையை கேட்டு கொதித்தெழுந்த பட்டியலின மக்கள் வீதிக்கு வர, கரிக்குப்பத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நிலைமை கைமீறிப்போகவே, காவல்துறை அதிகாரிகள் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் மறியல், மறுபுறம் சலசலப்பு என கரிக்குப்பம் கிராமமே இப்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயுமா? காவல்துறை எடுக்கும் அடுத்தகட்ட அதிரடி என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Link
பிள்ளையார் நகர்வலத்தில் தீண்டாமை, பட்டியலின மக்களுக்கு முட்டுக்கட்டை

பிள்ளையார் நகர்வலத்தில் தீண்டாமை, பட்டியலின மக்களுக்கு முட்டுக்கட்டை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாம்பரம் மாநகராட்சியில், "TVK அரசின் முதல் டெண்டர் முறைகேடு"

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved