Also Watch
Read this

தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் நினைவுகூர்வதாக முதலமைச்சர் விஜய் பதிவிட்டு உள்ளார். பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் பிறந்த தினம்...
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டி, முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
சுய மரியாதை, சமூகநீதி, பகுத்தறி நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
தந்தை பெரியாரின் கொள்கை தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம் பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
வெற்றி தமிழகத்தை...
தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும். வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved