Also Watch
Read this
"கடந்த தேர்தலில் தேமுதிகவிற்கு திமுகவில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டபோது அதை வரவேற்ற ஒரு நபர் தான்தான், இடப்பங்கீடு குறித்து பொதுப்படையாகக் கூறிய சில கருத்துகளை, பிரேமலதா தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்" என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிலருக்கு வயிற்று எரிச்சல்...
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்பொழுது ஆளும் கட்சியாக ஆளுகின்ற கட்சிகளில் ஒன்றாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. அது சிலருக்கு வயிற்று எரிச்சலை உண்டாக்கி வருகிறது.

தேமுதிக வந்த போது...
திமுக தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துக்களை தெரிவித்தேன்.

உடனிருந்த கட்சிகள் பதவிக்காக வெளியே ஓடிவிட்டார்கள் என விமர்சனங்கள் வைத்து துரோகப்பட்டங்கள் சூட்டிய போது, தேமுதிக திடீரென உள்ளே வந்த பொழுது ஏற்கனவே உடன் இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

அந்த உறவு பாதிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க முடியும் என்று நான் சொன்ன கருத்தை தேமுதிகவை குறை சொன்னது போல பிரேமலதா புரிந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved