news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ரூ.300 கோடி வசூல்

ரூ.100 கோடி மைல்கல்லை நோக்கி மண்டாடி

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரூ.100 கோடி மைல்கல்லை நோக்கி மண்டாடி

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்ததோடு, இந்த மைல்கல்லை மிக குறுகிய காலத்தில் எட்டிய மலையாள படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

ரூ.25 கோடி பட்ஜெட்டில்...
சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ரொமான்டிக் காமெடியாக வசூல் சாதனை படைத்துள்ளது. தற்போது வரை உலகளவில் 312 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது. வெளியான 24 நாட்களிலேயே 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. மிக வேகமாக இந்த மைல்கல்லை எட்டிய மலையாள படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு அதிக வசூல் செய்த மலையாள திரைப்படமான 'லோகஹ: சாப்டர் 1 – சந்திரா' படத்தின் வசூலை முறியடித்து, மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற புதிய சரித்திர சாதனையை ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படைத்துள்ளது.


ரூ.100 கோடி மைல்கல்லை நோக்கி...
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் உலக அளவில் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேர்மறை விமர்சனங்களால் விரைவில் ரூ.100 கோடி மைல்கல்லை எட்டுமென எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான ‘மண்டாடி’ திரைப்படம், வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் 80 கோடி ரூபாய் வசூலை எட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சூரி ஹீரோவாக நடித்த முந்தைய வெற்றிப் படங்களான விடுதலை 1 திரைப்படம் 54 கோடி ரூபாய் மற்றும் கருடன் - 63 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த வசூலை முறியடித்து, சூரியின் திரை பயணத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற புதிய சாதனையை 'மண்டாடி' பெற்றுள்ளது.

Related Link
சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்காவை நெருங்கிய தாக்குதல், ஈரான் போரின் எதிர்பாராத ஆபத்து

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved