Also Watch
Read this
சிவகங்கை அருகே 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொ* செய்யப்பட்ட வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாற்று சாதி காதல் திருமணத்திற்கு உதவியதால் நடந்த கொ*யா? அல்லது தொழில் போட்டியா? என தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முகம் சிதைக்கப்பட்டு...
சிவகங்கை மாவட்டம், பழமலை நகர் பின்புறமுள்ள பையூர் கொடிக்காடு கண்மாய் பகுதியில், 2 இளைஞர்கள் முற்றிலும் முகம் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாருக்கு அங்கே கண்ட காட்சி நெஞ்சை பதறவைத்தது. 2 இளைஞர்களின் உடல்களிலும் ஏராளமான வெட்டுக்காயங்கள் இருந்தன. அருகே அவர்கள் வந்த புதிய எர்டிகா காரின் கண்ணாடிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு சிதைந்து கிடந்தன.

டாஸ்மாக் பார்...
சம்பவ இடத்தில் கிடந்த செல்போன்கள், ஆவணங்களை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோதுதான், கொ*யுண்டவர்கள், குருந்தனி வாரியேந்தல் கிராமத்தை சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் அவரது நண்பர் பூபாண்டியன் என்பது தெரியவந்தது. தெய்வேந்திரனின் பின்னணியை தோண்டியபோதுதான் பல தகவல்கள் வெளியாகின. பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி குறிஞ்சிபாளையத்தில், 10 லட்சம் ரூபாய் அட்வான்ஸ், மாதம் 3 லட்சம் ரூபாய் வாடகையில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வந்தார் தெய்வேந்திரன். அதுமட்டுமின்றி, பொள்ளாச்சியிலுள்ள அனைத்து டாஸ்மாக் பார்களுக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சப்ளை செய்யும் தொழிலையும் செய்து வந்தார்.

ஓட ஓட விரட்டி...
இந்த திடீர் வளர்ச்சியால் அண்மையில்தான் புதிய எர்டிகா கார் ஒன்றை வாங்கி, அதற்கு மட்டும் கூடுதலாக 1 லட்சம் ரூபாய்க்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் செய்தார். சம்பவத்தன்று, காரின் முதல் சர்வீஸ் முடிந்து ஷோரூமில் இருந்து காரை எடுத்த தெய்வேந்திரன், நண்பன் பூபாண்டியனுடன் சேர்ந்து பயணித்து, பையூர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போதுதான், இருசக்கர வாகனங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இவர்களை சூழ்ந்துகொண்டு ஓட ஓட விரட்டி, முகத்தை சிதைத்துத் துடிதுடிக்க வெட்டி படுகொ* செய்துவிட்டு தப்பியோடியது.

24 மணி நேரத்தில்...
இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேரில் ஆய்வு செய்ததையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் சிக்னல்களை சல்லடை போட்டு அலசிய தனிப்படை போலீசார், 24 மணி நேரத்திற்குள் 5 குற்றவாளிகளை தட்டி தூக்கினர். கைதான பில்லூர் பாலமுருகன் ஏற்கெனவே கொ* வழக்கில் தொடர்புடைய ரவுடி. அவனுடன் தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார், காளீஸ்வரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

என்ன காரணம்?
எந்தவொரு குற்றப்பின்னணியும் இல்லாத இருவர் கொடூரமாக கொ*லப்பட்டதற்கு பின்னால் இரு கோணங்களை வைத்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்று சாதியைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தெய்வேந்திரனும், பூபாண்டியனும் முன்னின்று திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இரட்டை கொ* அரங்கேறியதா? அல்லது தொழில் போட்டியால் இந்த கொடூரம் அரங்கேறியதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலை மறியல், போராட்டம்
இதனிடையே, படுகொ* செய்யப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள், பேருந்து நிலைய பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொ*யில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் எனப் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved