news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க ஒப்புதல்

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேறிய 13 மசோதாக்களில் ஒன்றை தவிர, மற்ற அனைத்திற்கும் ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து சட்டமான 12 மசோதாக்களும், தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கும் ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2026–2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் பதிலுரை இடம் பெற்றன. கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல் தந்துள்ளார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல்
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டம் 2026
தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் திருத்த சட்டம்
தமிழ்நாடு ஊதியம் வழங்குதல் திருத்த சட்டம்
தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டம்
தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம்

தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்கு முறைப்படுத்துதல் இரண்டாம் திருத்த சட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திருத்தச் சட்டம் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம்
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம்
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குதல்
உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசுத்தலைவருக்கு...
தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா, ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது.
இந்த மசோதா உயர்கல்வித்துறை பல்கலைக்கழக விதிகளுடன் தொடர்புள்ளது என்பதால் குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Link
அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம், யார் சொல்வது உண்மை?

அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம், யார் சொல்வது உண்மை?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved