Also Watch
Read this
By: Manigandan Raja

2030-க்குள் புல்லட் ரயிலை தயாரிக்க இந்தியா திட்டம்
மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்களை 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான திருத்தப்பட்ட திட்டச் செலவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-ஜப்பான் கூட்டு போர் பயிற்சி
ராஜஸ்தானின் ஜோத்பூரில் இந்தியா-ஜப்பான் விமானப்படைகளின் கூட்டு போர் பயிற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங், ஜப்பான் விமானப்படை தளபதி ஜெனரல் டகேஹிரோ மோரிட்டா ஆகியோர் தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்து பயிற்சியில் பங்கேற்றனர்.

ராணுவ மோப்ப நாய்களுக்கான பயிற்சி முகாம்
உத்தரகாண்ட் மாநிலம் அவுலியில் நடைபெற்ற ராணுவ மோப்ப நாய்களுக்கான பயிற்சி முகாமில் பல்வேறு சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது, வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறிவது உள்ளிட்ட பயிற்சிகளை மோப்ப நாய்கள் கச்சிதமாக செய்து காட்டின.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved