Also Watch
Read this
By: Manigandan Raja

நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி
கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் கோட்டக்கம்பூர் பகுதியில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இருவர் பலி
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக் பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அருகே மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். சிலைக்கு அருகே தற்காலிக குடிநீர் விற்பனைக் கடையில் மின்சாரம் தாக்கியதாக கூறப்படும் நிலையில், கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சோஃபா குடோனில் திடீர் தீ விபத்து
மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் தனியார் சோஃபா குடோனில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான சோஃபாக்கள் தீயில் கருகி நாசமாகின. குடோன் முழுவதும் பற்றி எரிந்ததால் ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved