Also Watch
Read this
By: Manigandan Raja

நான் அவன் இல்லை, மச்சக்காரன் பட ஹீரோ ஜீவன்
நான் அவன் இல்லை, காக்க காக்க, மச்சக்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'லவ்வர் பாய்' படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.
அஷோக் குமார் இயக்கும் இத்திரைப்படத்தில் அர்ஜித் ஷங்கர், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'Raawadi' டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
சிறை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த எல்.கே.அக்சய் குமார் மற்றும் மலையாள நடிகர் பேசில் ஜோசப் நடிப்பில் உருவாகியுள்ள 'Raawadi' திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நிகழும் சம்பவங்களை நகைச்சுவையாக வைத்து திரைப்படம் உருவாகி இருக்கிறது.
'PARADISE' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ்
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'PARADISE' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. கயாடு லோகர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள 'PARADISE', வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved